உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் நலன்களுக்காக இராணுவத்தினர் நன்கொடை நிதியளிப்பு

ஒக்டோபர் 02, 2019

உலக சிறுவர் தினத்தை  (ஒக்டோபர், 01) முன்னிட்டு சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக  ஜனாதிபதி செயலகத்தின் ‘ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அறக்கட்டளை நிதியத்திற்கு ’ இலங்கை இராணுவத்தினால்  நன்கொடை நிதியளிக்கப்பட்டது.

இதற்கமைய ரூ. 10 மில்லியன் பெறுமதியான காசோலை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று (ஒக்டோபர்,  01) ஜனாதிபதி செயலகத்தில்  வைத்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சார்பில் இராணுவ பணிப்பாளர் நாயகம்  மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட திறன்களைக் கொண்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக இந்த நிதியை பயன்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.