பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் இராணுவ கலாபீடத்திற்கு தகவல் தொழிநுட்ப சாதனங்கள் அன்பளிப்பு

ஒக்டோபர் 03, 2019

கணனிகள் மற்றும் பிரிண்டர்கள் அடங்கிய ஒரு தொகுதி தகவல் தொழிநுட்ப சாதனங்கள் தியத்தலாவ இராணுவ கலாபீடத்திற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கி வைப்பட்டுள்ளது. குறித்த  தகவல் தொழிநுட்ப சாதனங்களை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி. ஷஹீத் அஹ்மத் ஹஷ்மத் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையத்தில் சந்தித்தபோது  வழங்கிவைத்தார்.

இரு நாடுகளின் இராணுவத்தினரிடையே காணப்படும்  இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையில் நிலவும் நல்ல புரிதல் ஆகியவற்றின் காரணமாகவே இலங்கை இராணுவத்தின் முதற்தர கலாபீடத்திற்கு  இச்சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கருத்து வெளியிட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் பிரதி  உயர்ஸ்தானிகர்  திரு. தன்வீர் அஹமட், தியத்தலாவ இராணுவ கலாபீட கொமடான்ட் பிரிகேடியர்.எஸ்.கே. ஈஸ்வரன், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கேணல். சஜ்ஜாத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.