இராணுவ தினத்தை முன்னிட்டு இந்துமத நிகழ்வு ஏற்பாடு

ஒக்டோபர் 03, 2019

இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு  கொழும்பு 13 இலுள்ள ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் விசேட இந்து மத பூஜை வழிபாட்டு நிகழ்வொன்று நேற்று (ஒக்டோபர், 02) இடம்பெற்றுள்ளது. இலங்கை இராணுவத்தின் இந்துமத சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ்விஷேட நிகழ்வில், இராணுவத்தினருக்கும் இராணுவ கொடிகளுக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டன.

இவ்விஷேட மத நிகழ்வில், பிரதம மதகுரு, சிவ சிறி சுரேஷ்வரன் குருக்களினால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, இராணுவ அதிகாரிகளின் பிரதானி, மேஜர்  ஜெனெரல் சத்தியப்பிரிய லியனகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உட்பட, இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவம் தனது  70வது ஆண்டு நிறைவு தினத்தை இம்மாதம் (ஒக்டோபர் -2019) எதிர் வரும் 10ம் திகதி கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.