இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள்

ஒக்டோபர் 04, 2019

இலங்கை இராணுவத்தின்  70வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட  இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாயலில் நேற்று (ஒக்டோபர், 03)இடம்பெற்றது.  இலங்கை இராணுவத்தின்  முஸ்லிம் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாயலின் இமாம் மௌலவி. சல்மான் இஸ்ஸதீன் அவர்களினால் சமய நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.  

இதற்கமைய இஸ்லாமிய மரபு முறைகளுக்கு அமைவாக விஷேட தொழுகை மற்றும் துஆ பிராத்தனை நிகழ்வுகள் என்பன இப்பள்ளிவாயலின் இமாமினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ அதிகாரிகளின் பிரதானி  மேஜர் ஜெனரல் சத்யப்ரிய லியனகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் பத்தாம் திகதி கொண்டாடப்படவுள்ள  இலங்கை இராணுவத்தின்  70வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட  சமய நிகழ்வு வரிசையில் இது நான்காவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.