பொலிஸ் சேவா வனிதா பிரிவினால் உலக சிறுவர் தின நிகழ்வு

ஒக்டோபர் 04, 2019

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் சேவா வனிதா பிரிவினால்  விஷேட நிகழ்வொன்று ஒக்டோபர் 01ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு - 05 பொலிஸ் குடும்ப நலன்புரி நிலைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்விஷேட நிகழ்வில், மருதானை பொலிஸ் பீல்ட் போஸ் தலைமையகம், கியூ வீதி மற்றும் லக்விந்து முன்பள்ளிகளை சேர்ந்த சுமார்  170 சிறுவர்கள் கலந்துகொண்டனர். பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தற்காலிக தலைவர் திருமதி பிரசாந்தி பெர்னாண்டோ பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

ஒக்டோபர் 01ஆம் திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.