மொரட்டுவயில் கைவிடப்பட்ட காணியிலிருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்பு

ஒக்டோபர் 04, 2019

மொரட்டுவ ரவட்டவட்ட பிரதேசத்தின் 404 இலக்கம் கொண்ட  கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து பயன்படுத்தப்படாத மூன்று கைக்குண்டுகள் இன்று மாலை (ஒக்டோபர், 04) மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளும்போது இக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

விமானப்படையின் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் அணியினர் இக் கைக் குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.