விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஒக்டோபர் 05, 2019

விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை கடமை நிறைவேற்றும் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து கொண்டார்.

வெளியேறல் நிகழ்வின் பின்னர் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 உப போலிஸ் பரிசோதகர்கள், 183 பொலிஸ் அதிகாரிகள்  மற்றும் 41 பெண் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் தேசிய சேவையில் சேர்ந்தனர்.

பாடநெறியின் போது சிறப்பு தேர்ச்சி பெற்ற படை வீரர்களுக்கு சிறப்பு விருதுகளும் சான்றிதழ்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

பின்னர், ஜனாதிபதி பயிற்சிப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன்  புதிதாக நிறுவப்பட்ட இரசாயன, உயிரியல், அணு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நடவடிக்கை கண்காணிப்பு தேசிய மையத்தை வைபவ ரீதியாக திறந்து  வைத்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், விஷேட அதிரடிப்படை பொதுமக்களிடையே உயர்ந்த மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் நாட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதிலும் விஷேட அதிரடிப்படை காத்திரமான பங்கினை அளித்ததனை  அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில், சமய தலைவர்கள், விஷேட அதிரடிப்படை  கொமடான்ட் சிரேஷ்ட பொலிஸ் பிரதி பொலிஸ்மா அதிபர், எம்ஆர் லதீப், சிரேஷ்ட அரச அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,  விஷேட படைப்பிரிவு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.