கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் தொடர்பான தகவல் மையத்திற்கு அதிகளவிலானோர் வருகை
ஒக்டோபர் 06, 2019ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் தொடர்பான தகவல் பெற்றுக்கொள்ளும் நாள் இன்று (ஒக்டோபர், 06) ஆகும்.
கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி வழங்கும் பாட நெறிகள், புலமைப்பரிசில்கள், சலுகைகள், நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பயிற்சி நெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் இம்மத்திய நிலையத்தினை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் எயார் வைஸ் மார்ஷல் எச் எம்எஸ்கேபி கொடகதெனிய அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
பல்கலைக்கழகத்தில் முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற குறித்த நிகழ்வில் எதிர்கால மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள், பொறியியல், சட்டம், முகாமைத்துவம் , சமூக அறிவியல், மருத்துவம், கணினி, சுகாதார அறிவியல், கட்டடவியல் சுற்றுச்சூழல் மற்றும் கட்டிட சூழல் கற்கை தொடர்பான அறிவியல் மற்றும் ஆராய்ச்சியும் மேம்பாடும் ஆகிய கற்கை நெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரிகேடியர் டபிள்யு.எம்.ஏ.கே.பி திலகரத்ன, பிரதி உப வேந்தர் பிரிகேடியர் என் ஹதுருசிங்க, பிரிகேடியர் ஆர்.ஜி.யூ ராஜபக்ஷ, கடமை நிறைவேற்று பிரதி உப வேந்தர் கலாநிதி எம்.எச்.ஜே.ஆரியரத்ன, பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.