நடுக்கடலில் நிர்கதியான பிரான்ஸ் நாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி
ஒக்டோபர் 07, 2019கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட பிரான்ஸ் நாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை தெற்கு கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட எஸ்வை-லெஸ்ஸியமொசிஸ் எனும் பெயர் கொண்ட பிரான்ஸ் நாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையினர் உதவியளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக ஆள் கடலில் நிர்கதியான நிலைக்குல்ளானது தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் குறித்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் விரைந்து சென்று அவசியமான உதவிகளை வழங்கியது.
ஒரு பெண் மற்றும் இரு ஆடவர் மற்றும் அவர்கள் பயணம் செய்த படகு என்பன இவ்வாறு பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வெளிநாட்டுக் கப்பல்கள் மற்றும் உள்நாட்டு படகுகள் என்பன இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் நிர்கதியான நிலைக்குள்ளான வெளிநாட்டுக் கப்பல்கள் மற்றும் உள்நாட்டு படகுகளுக்கு இலங்கை கடற்படையினர் உதவியளித்து வருகின்றனர். இலங்கை கடற்படையின் தலைமையகத்தில் இவ்வாறான அவசர நிலைகளின் போது பிரச்சினைகளை கையாள்வதற்கான விஷேட மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.