விமானப்படையின் ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கை

ஒக்டோபர் 09, 2019

விமானப்படயின் எம்ஐ 17 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி  இலங்கை  விமானப்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கையை கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 07) மேற்கொண்டனர்.

கெரவலபிட்டிய கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கையில் இலங்கை கடற்படையின் 'பராக்கிரமபாகு' கப்பல் பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற  நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.   

கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதும்  கடற் பிராந்தியத்தில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போதும் பல தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரைவான மற்றும் துல்லியமான குறிப்புகளுடன்  கப்பல்களை அடையாளங்காண்பதன் மூலம் உயிர் தப்பியோரை மீட்க விமானப்படை கண்காணிப்பு விமானம் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.