மழையுடனான வானிலை மேலும் தொடருவதற்கான சாத்தியம்

ஒக்டோபர் 15, 2019

தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில்  மேலும் தொடருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்று (ஒக்டோபர், 16) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின் பிரகாரம், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிலிருந்து மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் தொடருவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக 113 மில்லிமீட்டருக்கும் அதிகமாக  மழை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடி மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.