கடலோர பாதுகாப்பு படையினரால் தெற்கு சமூகங்களுக்கு உயிர்காப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 17, 2019

தெற்கு பிராந்தியத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் சமூகங்கள் ஆகியோருக்கு   உயிர்காப்பு மற்றும் நீரில் அடித்துச் செல்வதை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சித் தொடர் ஒன்று   இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. “நாட்டுக்காக ஒன்றினைவோம்” எனும் திட்டத்திற்கு அமைவாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடலோர பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதன்பிரகாரம்,  இம்மாதம் (ஒக்டோபர்) 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை கிரிந்திகம மற்றும் பூண்டல  கனிஷ்ட பாடசாலைகள், ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகம் மற்றும் பந்தகிரிய குளம் ஆகிய இடங்களில் குறித்த உயிர்காப்பு தொடர்பான பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் மீனவ சமூகங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நீர் பாதுகாப்பு , நீரில் அடித்துச் செல்வதை தடுத்தல் மற்றும் முதலுதவி ஆகியன தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பயனடைந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி செயலகம், உள்ளாட்சி அமைப்புகள், பிரதேச செயலகம் மற்றும் ஏனைய அரச நிறுவனக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.