ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 6 வது கூட்டு செயற்குழு கூட்டத்தில் செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்பு

ஒக்டோபர் 14, 2019

அவுஸ்திரேலியா கென்பரா நகரத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான  ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான 6 வது கூட்டு செயற்குழு கூட்டம் ஒன்று அண்மையில் (ஒக்டோபர், 11) இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது  11 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தலைமை தாங்கினார்.

அவுஸ்திரேலியா தூதுக்குழுவினரில், வீடைமப்பு அலுவல்கள் திணைக்கள கொள்கைக்குழுவின் தற்காலிக துணை செயலாளர், திரு. ஹமிஷ் ஹன்ஸ் போர்ட், இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டு படை தளபதி, மேஜர் ஜெனரல் கிரேக் புரினி, இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் அதிமேதகு. டேவிட் ஹோலி ஆகியோருடன் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல், தூதுவர் அதிமேதகு திரு. பிரைஸ் ஹட்சிசன் உட்பட ஏனைய அரச அதிகாரிகளும் உள்ளடங்குவர்.

இக்கலந்துரையாடலின் போது, ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பாக  இரு தரப்பினரும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தினர்.

மேலும் இதன்போது, ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் இலங்கைக்கு ரோந்து படகுகளை வழங்குவதன் மூலம் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான உதவிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவற்படையினருக்கு கடல்சார் எல்லை முகாமைத்துவ அபிவிருத்தி தொடர்பான அவர்களின் உதவிகளுக்கும் செயலாளர் தனது நன்றியினை தெரிவித்தார்.

இதன்போது, கடல்சார் ஒத்துழைப்பு, புலனாய்வு பகிர்வு மற்றும் பயிற்சிகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை அரசினால் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் முன்னேற்றங்களை அவுஸ்திரேலிய தூதுக்குழு பாராட்டியது.

இகலந்துரையாடலில், அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், அதிமேதகு திரு. ஜே சீ வெலியமுன, கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இலங்கை சார்பான தூதுக்குழுவில் கலந்துகொண்டனர்.       
பாதுகாப்பு செயலாளரின் இவ்விஜயத்தின்போது, பல்வேறு சிரேஷ்ட அவுஸ்திரேலியா அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு துறை செயலாளர் திரு. கிரெக் மொரியார்டி, வீடைப்பு அலுவல்கள் திணைக்கள பிரதி செயலாளர், திருமதி. லிண்டா கெட்டஸ் மற்றும் பாதுகாப்பு துறை இணைப்பு செயலாளர், திருமதி ரிபெக்கா ஸ்கின்னர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், செயலாளர் அவர்கள் கான்பெராவில் உள்ள அவுஸ்திரேலியா போர் நினைவகத்திட்கு விஜயம் மேற்கொண்டு அங்கு மலர் அஞ்சலியும்  செலுத்தினார்.

செயலாளர் தனது ஆஸ்திரேலியா பயணத்தின் போது பிரிஸ்பேனில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சங்கத்தால் பாராட்டப்பட்டதற்கு மரியாதை வழங்கப்பட்டது.