இராணுவத்தினரால் கிளிநொச்சியில் 150.15 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
ஒக்டோபர் 18, 2019இராணுவத்தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அரச மற்றும் தனியார் காணி உரிமையாளர்களுக்கு சொந்தமான சுமார் 150.15 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை இன்று காலை (ஒக்டோபர், 18) இடம்பெற்ற நிகழ்வின்போது விடுவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்கு சொந்தமான காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் படையினரிடமிருந்த காணிகள் தற்போது நிலவும் சமாதானம் நிமித்தம் ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டத்தின் கீழ் இந்த காணி விடுவிப்புகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பிரகாரம் 57 ஆவது படைப் பிரிவு மற்றும் 3 ஆவது கஜபா படையணியினரால் பயன்படுத்தப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிளிநகர் கிராம சேவகர் பிரிவு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பகாமம் கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள 139.56 ஏக்கர் அரச காணிகளும், தனியாருக்கு சொந்தமான 10.59 காணிகளும் இராணுவ தளபதி அவர்களினால் கிளிநொச்சி மாவட்ட செயலாளரான திரு எஸ் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு ஆர் கேதிஸ்வரன் ஆகியோரிடத்தில் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.