இராணுவத்தினரால் முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள்

ஒக்டோபர் 19, 2019

முன்னாள் எல்டிடிஈ போராளிகளின் பிள்ளைகள் குழுவினருக்கு கல்வி உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நேற்று (ஒக்டோபர், 18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு படைத் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் போராளிகள் குடும்பங்களின் பாடசாலை செல்லும் 20 மாணவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள், வைப்புக்களுடன் வங்கி சேமிப்பு புத்தகம், சீருடைதுணிகள், பாடசாலை பைகள் மற்றும் புத்தகங்கள் என்பனவற்றை இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கி வைத்துள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளாக வெல்டிங் பிளான்ட், கிரைண்டர் மெசின், மின்சார பயிற்சிகள், மேசன் உதவிகள், துவிச்சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், சோலர் பேனல்கள் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிர்வாக பகுதிகளுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்களுடன் கலந்தாலோசித்து அந்தந்த கிராம சேவைப்பிரிவு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட சிவிலியன்கள் பலரும் கலந்துகொண்டனர்.