ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஜூன் 11, 20192019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசரான விஜித் மலல்கொடவினால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இதன்போது வருகை தந்திருந்தனர்.
பல அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு காரணமாகவிருந்த இந்த மோசமான தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் அதன் பின்புலம் குறித்தும், குறித்த சம்பவங்கள் தொடர்பிலான வேறு காரணிகள் குறித்தும் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
இரண்டு கட்டங்களாக அமைந்த இந்த விசாரணை நடவடிக்கைகளின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் இதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: pmdnews.lk