“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நாளை ஆரம்பம்

ஒக்டோபர் 20, 2019

இலங்கை கடற்படையின்  “கோல் டயலொக் - 2019” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நாளை (ஒக்டோபர், 21) ஆரம்பமாக உள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க  உள்ளார்.

இம்மாதம் (ஒக்டோபர்) 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் பத்தாவது தடவையாகவும் இடம்பெறவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு, “நாடுகடந்த கடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்தல்: தசாப்தத்தின் ஒரு மீளாய்வு"” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கடற்படையினரின் அழைப்பின்பேரில்  இம்மாநாட்டில் 55 நாடுகள், 10 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 3 பாதுகாப்பு துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.