அமெரிக்க பணிகளுக்கான பிரதித் தலைவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 22, 2019

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு. மார்டின் டீ கெல்லி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (ஒக்டோபர், 22) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.