“கொழும்பு வான் ஆய்வரங்கு -2019” நாளை ஆரம்பம்...
ஒக்டோபர் 23, 2019இலங்கை விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச மாநாடான “கொழும்பு வான் ஆய்வரங்கு - 2019” இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வருட ஆய்வரங்கு 'ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால இலக்கினை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழி ”' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஆய்வரங்கில் அனைத்து பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 க்கும் மேற்பட்ட இராணுவ தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகளாவிய சிந்தனைக் குழுக்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பு வான் ஆய்வரங்கு 2019” தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் (ஒக்டோபர், 22) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
'ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால இலக்கினை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழி ”' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ்வருட ஆய்வரங்கு, எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு விடயங்கள் மற்றும் புவி வெப்பமடைதல், இயற்கை பேரழிவுகள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேற்கொள்ளும்போது விமானப்படையின் பங்கு மற்றும் முக்கியத்துவம் எவ்வாறு அமையவுள்ளது என்பதை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது.