பாதுகாப்புச் செயலாருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

ஒக்டோபர் 23, 2019

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தினர்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 23) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் (ஒய்வு) ஷேமல் பெர்னாண்டோ  அவர்களினால்  பாதுகாப்புச் செயலாளருக்கு   பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

பொப்பி மலர் தினம் என அறியப்படும் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வானது, முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.