கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கிடையிலான கூட்டுப்பயிற்சி

ஒக்டோபர் 23, 2019

கப்பல்களில்  ஹெலிகாப்டர்களை தரையிறக்கும்   கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கிடையிலான கூட்டுப்பயிற்சி,  திருகோணமலை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று  (ஒக்டோபர், 20) இடம்பெற்றது.  விமானப்படையின்  பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் கடற்படையின் எஸ்எல்என்எஸ் சிந்துரால கப்பல் ஆகியன பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. ஆழ் கடல்களில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  

எதிர்காலத்தில் கூட்டு படை நடவடிக்கைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்   இரு சேவைகளினதும்  கூட்டு ஒத்துழைப்புடன் இந்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டமை குறிப்படத்தக்கது.