ஐன்ட்ஹோவன் பொக்ஸ் கோப்பை - 2019 இல் பொலிஸ் குத்துசண்டை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சுவீகரிப்பு

ஒக்டோபர் 24, 2019

நெதர்லாந்தில் நடைபெற்ற ஐன்ட்ஹோவன் பொக்ஸ் கோப்பை - 2019  குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட பொலிஸ்  குத்துசண்டை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சுவீகரித்தனர்.  'ஐன்ட்ஹோவன் பொக்ஸ் கோப்பை'  நெதர்லாந்தில் நடைபெறும் மிகப்பரிய   குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றாகும். இக்குத்துச்சண்டை போட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல்  20ஆம் திகதிவரை  வான் டேர்  வாக்  ஐன்ட்ஹோவன்  ஹோட்டலில் இடம்பெற்றது.

63 கிலோ எடைப்பிரிவின் கீழ் போட்டியிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரசிங்க வெண்கல பதக்கத்தையும், 75 கிலோ எடைப்பிரிவின் கீழ் போட்டியிட்ட  பூர்ணிமா ஜெயசூரியா வெள்ளிப்பக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 நோபல் ஆர்ட் ஆஃப் பொக்சிங் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஐன்ட்ஹோவன் பொக்ஸ்  கோப்பை குத்துச்சண்டை போட்டிகள், டச்சு குத்துச்சண்டை சங்கம் மற்றும் AIBA ஆகிய சங்கங்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்து எடைபிரிவுகளையும் பிரதிபலிக்கும் ஆண், பெண் முதற்தர குத்துச்சண்டை வீரர்களுக்கான போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.