வடக்கு பிராந்தியத்தில் படையினரின் சமூக நல பணிகள் தொடர்கின்றன
ஜூன் 10, 2019யாழில் உள்ள படை வீரர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீடு மற்றும் 18 கழிவறை தொகுதிகள் என்பன அண்மையில் கட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வைபவத்தின்போது பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. யாழ் பாதுகாப்பு படை தலைமையத்தினால் மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வீடு மற்றும் கழிவறை தொகுதிகளின் இந்நிர்மாணப்பனிகள் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் '82-குழு' வினரின் நிதி அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கடந்தவாரம் (ஜூன், 03) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினரால் “ரட வெனுவென் எகட சிடிமு” எனும் தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக நீர்ப்பாசன, விவசாய மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தன்னிமுருப்பு நீர்ப்பாசன குளத்தின் அணைக்கட்டு பகுதியினை இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், சின்னாறு ஆற்றுப்பகுதி மற்றும் அதனை அண்டிய கடற்கரை பகுதியினையும் மாணவர்கள் குழுவினர் இணைந்து சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் பொது மக்களின் பங்கேற்றலுடன் மர நடுகைத் திட்டமொன்றும் மேற்கொள்ப்பட்டுள்ளது. இதன் போது முல்லைத்தீவு நகரப்பகுதியில் கும்புக், வேம்பு மற்றும் ரோசியா வகையை சேர்ந்த மரக் கன்றுகளும் நடப்பட்டது.
இராணுவத்தினர் தேசிய போதை ஒழிப்பு நிகழ்வில் இணைந்து கொள்ளும் வகையில் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் மற்றும் முல்லியாவெலி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் போதை ஒழிப்பு மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடாத்துவதற்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கயுள்ளனர்.