சேவா வனிதா பிரிவினால் சமூக ஆசாரம், நெறிமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு

ஒக்டோபர் 24, 2019

 சமூக ஆசாரம், நெறிமுறைகள், தகவல் தொடர்பு மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான  செயலமர்வு ஒன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அண்மையில் நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வு சப்புகஸ்கந்த  பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியில் கடந்த புதன்கிழமையன்று (ஒக்டோபர்,23 ) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.