வடக்கில் கடற்படையினரால் மரநடுகை நிகழ்வு முன்னெடுப்பு

ஒக்டோபர் 26, 2019

அண்மையில் வடக்கு தீவில் மரநடுகை நிகழ்வொன்றினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

கடற்படையின் “நீல ஹரித சங்கிரமய” எனும் பசுமை திட்டத்தின் கீழ் இம்மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இத்திட்டத்தின் கீழ் பொருளாதார பெறுமதிமிக்க பலா, மா, தலிசே ஆகிய மரக்கன்றுகள் இலங்கை கடற்படை உத்தர வளாகத்தில் நடப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில், வடக்கு கடற்படை பகுதியின் தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீர கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.