பாதுகாப்பு அமைச்சின் கிளைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2019

ஒக்டோபர் 27, 2019

பாதுகாப்பு அமைச்சின் கிளைகளுக்கிடையில் இடம்பெற்ற வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் நேற்று (26) கலந்து சிறப்பித்துள்ளார்.

கொழும்பில் உள்ள விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் செயலாளருடன் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு  தலைவி, திருமதி சோனியா கோட்டேகொட அவர்களும் இணைந்திருந்தார்.

இந்நிகழ்விற்கு விமானப்படை தளபதி, எயார் மாஷல் சுமங்கல டயஸ் அவர்களும் வருகை தந்திருந்தார்.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்த வீரர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பதினொரு அணிகள் கலந்துகொண்டு விறுவிறுப்பாக நடைபெற்ற  இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தொழிநுட்ப பிரிவு மற்றும் கணக்கு பிரவு ஆகிய அணிகள் இறுதி சுற்றுப்போட்டிக்கு தெரிவாகின. பின்னர் களத்தில் தமது திறமைகளை நிரூபிக்கும் வகையில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அணியினர் தங்களுடன் விளையாடிய எதிரணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில், வெற்றிபெற்ற மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களுக்குமான வெற்றிக் கிண்ணங்களை மேலதிக செயலாளர் (நிர்வாகம்) டபிள்யூ.ஏ.குலசூரிய, இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிகேடியர் டி.ஜே. கொடிதுவக்கு, தற்காலிக மேலதிக செயலாளர், திருமதி. நிலந்தி பிரேமச்சந்திர மற்றும் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி,  பிரிகேடியர் அஜித் திசாநாயக்க ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.