நீர்ப்பாசன கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளில் இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைவு
ஒக்டோபர் 27, 2019அண்மையில் (ஒக்டோபர், 21) வடக்கில் இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து கனகராயன் ஆரு நீர்ப்பாசன கால்வாயை சுத்தம் செய்து அதன் நீரோட்டத்தினை ஒழுங்குபடுத்தியுள்ளனர். இரனைமடு குளத்திலிருந்து இந்நீர்ப்பாசன கால்வாய் மூலம் நீர் கொண்டு செல்லப்படுவதுடன், அங்குள்ள விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் ஒரு முக்கிய கால்வாயாக காணப்படுகிறது.
பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில், நீர் ஓட்டத்தை எளிதாக்குவதற்கும், நிரம்பி வழிவதை நிறுத்துவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ககிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகத்தின் பிரதிப்பணிப்பாளர் மற்றும் அவரது பணியாளர்கள், கண்டவாலி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களும் இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இதேவேளை, இராணுவத்தின் “திருளிய வெனுவேன் அபி” எனும் திட்டத்தின்கீழ் பல்லவராயன்கட்டு பிரதேச சோலைநெல கிராமத்திலுள்ள சிவிலியன்கள் மத்தியில் சுமார் 300 மரமுந்திரிகை கன்றுகளை இராணுவத்தினர் விநியோகித்துள்ளனர்.