கந்தளாய் குளப்பகுதியில் பொலிஸ் உயிர் காப்பு நிலையம் ஸ்தாபிப்பு

ஒக்டோபர் 28, 2019

அண்மையில் கந்தளாய் குளப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நிலையமொன்று இலங்கை பொலிஸாரினால் வெகுவிமர்சையாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த உயிர்காப்பு நிலையம் கந்தளாய் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், மகிந்த திசாநாயக்க அவர்களால் இம்மாதம்  (ஒக்டோபர்) 22ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உயிர்காப்பு நிலையமானது மொபிடல், நிறுவனத்தின் ஒத்துளைப்புடன் பொலிஸ் சுற்றுச்சூழல், கடற்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவிக்கான பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் எச்.எச்.சூலசிறி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்குளமானது சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய ஒரு பிரசித்திபெற்ற தளமாகக் காணப்படுவதுடன், இதனை பார்வையிட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ஏராளமானோர் தினசரி வருகின்றனர். இவர்களில் அநேகமானோர் இக்குளத்தில் இரங்கி குளித்து மகிழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உயிர்காப்பு நிலையத்தின் மூலம் நீரில் மூழ்குவது மற்றும் நீரில் அடித்துச்சொல்வது தொடர்பான சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தகுதிவாய்ந்த பொலிஸ் உயிர் காப்பு வீரர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.