கிளிநொச்சி இராணுவ வீரர்களினால் இரத்ததானம்

ஒக்டோபர் 28, 2019

அண்மையில் (ஒக்டோபர், 26) கிளிநொச்சி இரத்த வங்கிக்கு மீள்நிரப்ப தேவையான இரத்த மாதிரிகளை கிளிநொச்சி இராணுவ வீரர்கள் சுயமாக முன்வந்து அவர்களது இரத்த மாதிரிகளை தானம் செய்துள்ளனர்.  

அரிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியியல் மற்றும் விவசாய துறைகளை சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கிணங்க  புற்று நோயாளிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் தேவையான இரத்த மாதிரிகளை தானம் செய்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் இரத்ததான நிகழ்வினை இளநிலைப் பட்டதாரிகள் கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர்.

இராணுவத்தினர் தொடர்ச்சியாக சுயமாக முன்வந்து தகுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவும் வகையில் இவ்வாறு அரச வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கு இரத்த மாதிரிகளை தானம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.