ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 28, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழுவினர்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (ஒக்டோபர், 28) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் தூதுக்குழுவிற்கு தலைமை வகித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தலைமை கண்காணிப்பாளர் திமித்ரா அயோன ஆகியோருக்கிடையே சினேக பூர்வமான  கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.