விஷேட தேவையுடைய குடும்பத்தினருக்கு மனிதாபிமான உதவி
ஒக்டோபர் 28, 2019மனிதாபிமான உதவிகளை கருத்திற்கொண்டு தேவையுடைய குடும்பம் ஒன்றின் நல்வாழ்வுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினை வயோதிபர் ஒருவருக்கு இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட் படைபிரிவினர் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர், 25) அன்பளிப்பு செய்துள்ளனர்.
இராணுவம் மற்றும் சிவில் சமூகத்திற்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஷேட தேவையுடைய நான்கு குழந்தைகளின் தந்தைக்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாகனம் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த முச்சக்கரவண்டி விஷேட தேவையுடையோர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறிமுறை காலாட் படையணியின் தலைமையகம் அமைந்துள்ள தம்புளை ஹல்மில்லேவ பகுதியில் வசித்துவரும் விஷேட தேவையுடைய பயனாளிக்கு குறித்த முச்சக்கர வண்டி பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ ஊடக பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.