காலநிலை தொடர்பான அவசரநிலைமைகளை எதிகொள்ள கடற்படையின் மீட்புக் குழுக்கள் தயார்நிலையில்

ஒக்டோபர் 29, 2019

இலங்கை கடற்படை சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்படக்கூடியதாக  அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் முனெச்சரிக்கை நடவடிக்கையாக  நிவாரண குழுக்களை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்பிரகாரம் தென் மாகாணத்தின் தவளம மற்றும் நெலுவ ஆகிய பிரதேசங்களில் கடற்படையின் நிவாரண குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை மேற்கொள்ளவதற்காக கடற்படையின் துரித பதிலளிப்பு, மீட்பு மற்றும் நிவாரண குழு (4RU) மற்றும் கடற்படை சுழியோடிகள் பிரிவு ஆகியன நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்படையினர்  மழை காலங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் குளங்கள், பாலங்கள் மற்றும் மதகுகள் போன்றவற்றை சுத்தம் செய்து வெள்ளநீர் இலகுவாக வடிந்தோடும் வண்ணம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்தகைய ஒரு திட்டமாக நேற்று (28) காலியிலுள்ள தொடங்கொட பாலம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும்,  தெற்கு கடற்படை கட்டளையகத்தின் இணைப்பிலுள்ள கடற்படை சுழியோடிகள் குழுவினர் குப்பைகள் மற்றும்  கழிவுபொருட்கள்  சேர்ந்து அடைப்புக்குள்ளாகியிருந்த பாலங்களை சுத்தம் செய்தனர்.  குறித்த அடைப்புகளால் அப்பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அச்சுறுத்தல் காணப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.