இராணுவத்தினரால் தடைப்பட்ட வீதிகள் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்து இயல்புநிலைக்கு
ஒக்டோபர் 29, 2019தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதுடன், மக்களின் அன்றாட வாழ்கை பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் உள்ளூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைகையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, மலைநாட்டு பகுதியில் மண்சரிவுகள் காரணமாக சில பிரதான வீதிகளுக்கிடையிலான வாகனப்போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
அண்மையில் ( ஒக்டோபர், 27) பதுளை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டிருந்த இரண்டு பிரதான வீதிகளின் தடைகளை மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவ வீரர்கள் விரைந்து செயற்பட்டு தடைகளை நீக்கியுள்ளனர். இதேவேளை, மலையில் இருந்து பெரிய பாராங்கள் ஒன்று சரிந்து வீழ்ந்து கும்பல் வெவ எல ஊடான பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்ட போது அதன் தடைகளை நீக்குவதற்கு இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் ஹப்புத்தளை பிரதேசத்திற்கு அருகாமையில் பாரிய மரங்கள் வீழ்ந்து பதுளை – கொழும்பு பிரதான வீதி தடைப்பட்டு காணப்பட்ட வேளையில் அதன் தடைகளை நீக்குவதற்கு இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.