பொலிசாரினால் களுகங்கை மருங்கில் மரக்கன்றுகள் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு

ஒக்டோபர் 30, 2019

சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக களு கங்கையின் கரையோரங்களில் மருத மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இலங்கை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தினை தேசிய குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை, மீள் வன உருவாக்கம் மற்றும் களனி பல்கலைக்கழக இளமாணி மாணவர்கள் ஆகியோர்கள்  இணைந்து முன்னெடுத்தனர்.

 களு கங்கையின் கரையோரங்களில்  அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும்   மற்றும் கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியை நீரை தேக்கிவைத்திருக்கும்  பகுதியாக மாற்றும் நோக்கத்துடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கந்தானை  நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே ஆற்றின் மருங்கில்  ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு  சுமார் 200  மருத மரங்கள் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.