ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது - 2019 விமானப்படை மற்றும் கடற்படை வசம்

ஒக்டோபர் 30, 2019

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் -2019 எனும் விருது வழங்கும் விழா நேற்று  (ஒக்டோபர், 29) கொழும்பு தாமரைத்தடாக உள்ளக அரங்கில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் விழாவில்  திருகோணமலை சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை கலாசாலைக்கு சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் அரசதுறை எனும் வகுதியில்  சிறந்த அரசு நிறுவனத்திற்கான தங்க விருது வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் குறித்த தனது கொள்கைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஜனாதிபதி தங்க விருதைப் பெற்றது இதுவே முதல் முறையாகும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை கடற்படையின் "நீல ஹரித சங்கிராமய"  திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் செயற்பாடுகளில்  திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலைக்கு  ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இ
 
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வானது, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்துறை மற்றும் தனிநபர்கள் சுற்றுச்சூழல் நேய மனப்பான்மையை வெளிப்படுத்தி மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம் மாசற்ற  சூழலை உருவாக்கும் நோக்கில்  குறித்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.