கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் KDU + வலைத்தளம் அங்குரார்ப்பணம்

ஒக்டோபர் 31, 2019

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான KDU + பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால்   உத்தியோக பூர்வமாக  அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை (ஒக்டோபர்,30) இடம்பெற்ற வைபவத்தின் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான KDU +  அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் நாட்டின் சட்டத்தை மதிக்கும் மற்றும் அமைதி நேசிக்கும் குடிமக்களின் உள்ளார்ந்த பொறுப்பாக இருப்பதால், அது தொடர்பில் அனைவரும்  விழிப்புடன் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த வலைத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிவில் மற்றும் இராணுவத்தின் பல்வேறு துறைகளை  சார்ந்த  துறைசார் நிபுணர்களுடன் கூடிய ஒரு தனித்துவமான ஆளுமைகளைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை தளபதிகள், உப வேந்தர் உள்ளிட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.