நீரில் மூழ்குவதைத் தடுப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஒக்டோபர் 31, 2019அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பாடசாலை மாணவர்களுக்கா நீரில் மூழ்குவதைத் தடுப்பது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த நிகழ்வு திருகோனமலை சிங்கள மஹா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஆரம்பிக்கட்ட இலங்கை தேசிய நீரில் மூழ்குவதை தடுக்கும் திட்டத்திற்கு இணையாக இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கடலோர நகரப்பகுதியின் பாடசாலை மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வு கடலோர பாதுகாப்பு படையின் திறமை மிக்க உயிர்காப்பு பயிற்றுவிப்பாளர்களால் நடாத்தப்பட்டுள்ளது.
நீரில் அடித்து செல்லப்படுவதன் மூலம் ஏற்படும் உயிரிழப்பு நாட்டில் இரண்டாவது பிரதான காரணம காணப்படுகிறது. இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் குறிப்பாக கடலோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு உயிர்காப்பு மற்றும் தடுப்பு ஆகிய பாடநெறிகள் தொடர்பான கருத்தரங்குகள், விழிப்புணர்வு திட்டங்கள் என்பவற்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படை நாடுமுழுவதிலும் உள்ள பிரபல்யமான கடற்கரையோரங்களில் உயிர்காப்பு பிரிவுகளை நிறுவியுள்ளதுடன், இப்பணிகளில் கடலோர பாதுகாப்பு படையின் நிபுணத்துவமும் திறமையும் வாய்ந்த உயிர்காப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இவ் உயிர்காப்பு பிரிவினர்களினால் சுமார் 1300 ற்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.