வட பிராந்திய மக்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைப்பு

நவம்பர் 01, 2019

இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு பிராதியத்தைச் சேர்ந்த அனகவீனமுர்ற பொதுமக்களுக்கு செயற்கை கால்களைப் பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டம் அண்மையில் (ஒக்டோபர்,30 ) முன்னெடுக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த இத்திட்டத்தில் அங்கவீனமுற்ற 30 பேருக்கான  செயற்கை கால்கள் வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தினால்  விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக
கண்டி அங்கவீனமுற்றோருக்கான மத்திய நிலையத்தினால்  சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த செயற்கை கால்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பயனாளிகள் உள்ளூர் அரச அதிகாரிகளாலும் சமூக தலைவர்களாலும் தெரிவுசெய்யப்பட்டனர். இத்திட்டமானது,  வடக்கு பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.