‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை நிகழ்வு கிளிநொச்சி மைதானத்தில்
ஜூலை 30, 2019ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது. அதற்கமைய (26) அம் திகதி வெள்ளிக்கிழமை மேலும் ஒரு தற்பாதுகாப்பு கலை பயற்ச்சியானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளகத்தின் அன்மையுள்ள 'அங்கம்போர' கிராமமான இரணைமடுகுளத்திற்கு அறுகில் இடம் பெற்றது.
இந்த ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் கையால்-கை போர் வடிவங்களுடன் கிராமத்தின் தொடக்கத்திற்குப் பிறகு உரூமி (எதுனு கடுவா), வாள், போர் கோடாரிகள், தடிகள் போன்ற பலவகையான பாரம்பரிய ஆயுதங்களுடன் கிராமம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வடிவத்துடன் பயிற்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் ஆசிர்வாதத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் அவர்களுக்கான தேவையான பயிற்சிகளை மேம்படுத்தி கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் தலைமையில் பனாகொடையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது அங்கம்போர பயிற்ச்சி நிலையம் மற்றும் பயற்ச்சி மையத்தினரின் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இலங்கை இராணுவத்திற்கு புதிய விளையாட்டாக ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலையில் (கலா எலி மங்கல்லயா) ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னால் தளபதி (ஓய்வு) மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் பங்களிப்புடன் பிரதி நிறைவேற்வு பணிப்பாளர் அவர்கள் இரண்டாம் கட்டமாக கிளிநொச்சி ‘அங்கம்பொர’ கிராமத்தை தேர்ந்தெடுத்தனர். இதில் வெத கெதர (பண்டைய மருத்துவ பிரிவு) யோகா, அருண கடவர, தொரண, சன்ஹிந்த மற்றும் இரண்டு போர் வீரர்கள் ஒருவருக்கொருவர் பலத்தை சவால் செய்யும் பயற்ச்சிகளும் இடம் பெற்றன.
இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாக கலந்து கொண்டது ‘உர்காவல’ பயிற்ச்சியை பார்வையிட்டார். மேலும் புராவித்ய சக்ரவர்த்தி விமலசார தேரர், மேஜர் ஜெனரல் ரவிபிரிய மற்றும் சிரேஷ்ட் அதிகாரிளும் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் ‘அங்கம்பொர’ 'ராவணா தண்டவா' (பாராட்டுப் பாடல்) பாடியதன் மூலம் விழா மேலும் சிறப்பாக அமையப்பட்டது.
ஆதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா அவர்கள் 'அங்கம்போர’' குரு ரிதிகலா பரபுரி தேவிந்த லக்சிரி மற்றும் அதன் தற்காப்பு கலையின் வரலாற்றை அறிமுகப்படுத்தினார். சில நிமிடங்களுக்குப் பிறகு. ஒரு பாரம்பரிய நிகழ்வாக 'வேத கெதரா'வுக்குள் உள்ள பூர்வீக மருத்துவ பயிற்சியாளரை சந்தித்தித்து உரையாடினர். பின்னர் அங்கம்பொர 'வீரர்களின் பயற்ச்சியை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா, அவர்களால் பிரதான அதிதி வரவேற்கப்பட்டார். ஆதனைத் தொடர்ந்து படையிரனால் இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
ஜோதிடம், தியானம், மருத்துவ முறைகள், சூனியம், மாயையான தந்திரங்கள் அடங்கிய பல்வேறு குணாதிசயங்களுடன் 'அங்கம்பொர' தற்பாதுகாப்பு கலை இலங்கை உரிமைகளின் காலத்திற்கு முந்தைய ஒரு தற்காப்புக் கலை உள்நாட்டில் ஒரு குறிப்பிட்ட தற்காப்பு சண்டையாக பயன்படுத்தப்படுகிறது. இப் பயற்ச்சியானது வெளிநாட்டு படையெடுப்பாளர்களை எதிர்ப்பதற்காகவும் பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏனெனில் அதன் செயல்பாட்டுக்கு பயந்து காலனித்துவ காலங்களில் நாட்டில் இந்த 'அங்கம்பொர' நடைமுறையை தடைசெய்தது.
இந்த நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வூ) நிஷ்சங்க ரணவன கட்டளை தளபதிகள், படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் படையினர் மற்றும் முக்கிய அதிதிகள் கலந்து கொண்டனர்.