ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 01, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின்  தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான பாதுகாப்பு நிபுணர், திரு. மானுவல் அமரில்லா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (நவம்பர், 01) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், திரு. ஜகத் அபேசிறி குணவர்த்தன, இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிக்கேடியர்  டீ ஜே கொடித்துவக்கு, பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிக்கேடியர் டீ எம் ஏ பீ திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.