போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவரினால் பொதுமக்களிடையே அமைதியின்மை

நவம்பர் 01, 2019

மாவத்தகம பிரதேசத்தில்  இன்றைய தினம்  (நவம்பர், 01) இடம்பெற்ற ஒரு துரதிஷ்ட சம்பவத்தை அடுத்து காயமுற்ற இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை மாவத்தகமை கரகஹதெனிய சந்தியில் இடம்பெற்ற  இச் சம்பவத்தில்,சந்தேகநபரான  29 வயதுடைய, மிஹிந்து குலசூரியகே பிரியந்த குமார என்பவர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதுடன் பல வாகனங்களுக்கும் சேததத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

 வேவுட சிங்கபுரவை வசிப்பிடமாக கொண்ட குறித்த சந்தேக நபர், போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என நம்பப்படுகிறது. இச்சந்தேக நபரினால், இரண்டு லொறிகள், ஒரு வேன் மற்றும் ஒரு கார் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன்  குறித்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட  அப்பாவி முஸ்லிம் நபரொருவரும்காயப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தடியினை பயன்படுத்தியே  வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் குறித்த சிவிலியன் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான தாக்குதலை மேற்கொண்ட  நபர் இன்று காலை தனது மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என அவரின் தாயார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபர் அயலவர்களினால்  குருணாகல் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். தற்போது இருவரும் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
எனவே, இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.