கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிவதற்காக பொலிசாரினால் இரண்டு ரோபோக்கள் நிறுத்தி வைப்பு

நவம்பர் 04, 2019

பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதன் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு புதிய ரோபோக்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது. இரண்டு ரோபோக்களும் விமான நிலையத்தின் வெளியேறுதல் மற்றும் உள்வருகை ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  பயணப்பொதிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை அவதானமாகப்  பரிசோதிப்பதை உறுதி செய்யும் வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த ரோபோக்கள் ஒவ்வொன்றும் சுமார் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியானதாக காணப்படுவதுடன், இந்த ரோபோக்களுக்கு வெடிபொருட்களைக் கண்டறியும் தொழில்நுட்ப திறனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.