--> -->

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்கள் இராணுவத்தினருக்கு கையளிப்பு

நவம்பர் 05, 2019

பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்  புதிய கண்டுபிடிப்புகள்  பல பாதுகாப்பு அமைச்சில் (நவம்பர்,05) இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கை இராணுவத்தினருக்கு கையளிக்கப்பட்டது.

இப்புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் (கலாநிதி ) எஸ்டிஎஸ் டி சில்வா (ஓய்வு) அவர்களினால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த கண்டுபிடிப்புக்களை உத்தியோகபூர்வமாக கையேற்ற பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக அவைகளை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் ஒப்படைத்தார்.  

பீரீஆர் 80 கள முனை பீரங்கி சிமுலேட்டர், 81 மிமீ மோட்டார் சிமுலேட்டர், இலகு ரக வாகன செலுத்தும்  டிரைவிங் சிமுலேட்டர், மொபைல் துப்பாக்கி சூட்டு எல்லை மற்றும் பாலிஸ்டிக் ஆய்வுகூடம், மெய்நிகர்  பரசூட்  பயிற்சி சிமுலேட்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப படைவீரர்  உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையம் உருவாக்கியுள்ளது.
 
சர்வதேச ரீதியிலான போட்டி முறைமைகள் மற்றும் அவற்றுக்கான  தீர்வுகளுடன் இராணுவத்தினருக்கு   உலகத் தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை நிறுவும் நோக்கத்துடன் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையம்   2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில்  சிரேஷ்ட இராணுவ  அதிகாரிகள், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.