புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி கோலாகலமாக நாளை திறக்கப்படவுள்ளது

நவம்பர் 07, 2019

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி  (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது. நாளை காலை இடம்பெற உள்ள நிகழ்வின்போது, இப்புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கோலாகலமாக திறந்துவைக்க உள்ளார்.

தற்போது பல்வேறு இடங்களிலும் செயற்பட்டுவரும் இராணுவ தலைமையகத்தின் அனைத்து திணைக்களங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இராணுவ நிபுணத்துவத்துடன் இப்புதிய இராணுவத்தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்புதிய இராணுவத் தலைமையகத்திற்கு  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பல்வேறு மேற்பார்வை விஜயங்களை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளின் நிறைவு மற்றும் கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு ஆகியன தொடர்பாக  இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.