ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்

நவம்பர் 18, 2019

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  இன்று (நவம்பர் 18, 2019) அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளி மகா சேயவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய அவர்கள் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும்  கலந்துகொண்டனர்.

கடந்த  சனிக்கிழமை (நவம்பர்,16) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பெருமளவிலான  வாக்குகளைப் பெற்று  இலங்கையின் 7 வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவானது குறிப்பிடத்தக்கது.