பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சந்திப்பு

நவம்பர் 22, 2019

பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சீ டீ விக்ரமரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.

விசேடமாக  வர்த்தக தலைநகர், கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் அனைத்து வீதி பயனாளர்களுக்கும் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் துரிதமாகவும் இறுதியானதுமான தீர்வுகளை மேற்கொள்ளும் வகையில் பொலிசாருக்கு தேவையான அறிவுறுத்தல்களை  வழங்கியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீ ஜே கொடித்துவக்கு அவர்களும் கலந்துகொண்டார்.