கிழக்கு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

நவம்பர் 26, 2019

கிழக்கு பாதுகாப்பு படைத்  தலைமையகம் இவ்வருடம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிழக்கு  மாணவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலவச கல்வி கருத்தரங்குகளை கடந்த வாரம் நடாத்தியது. மூதூர்  பேர்ள்  கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (நவம்பர், 20) ஏற்பாடு செய்யப்பட்ட   இவ் இலவச கல்வி கருத்தரங்கு, கிழக்கு பாதுகாப்பு படைவீரர்களது ஏற்பாட்டில்  இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் இலவச கல்வி கருத்தரங்கில் சுமார் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இப்பிரதேச மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையில்  கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களினால்  பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. விசேடமாக பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள  மாணவர்களுக்காக பிரசித்திபெற்ற தகுதிவாய்ந்த வளவாலர்களைக் கொண்டு  இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.