இந்திய கடற்படைக்கப்பல் இலங்கை தீவிற்கு வருகை

நவம்பர் 26, 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் நிரீக்ஷக்” கப்பல் பயிற்சி நோக்கிலான  விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (நவம்பர், 25) இலங்கையை வந்தடைந்தது. திருகோணமலை  துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கப்பல் தமது பயிற்சி நடவடிக்களை நிறைவு செய்த பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர், 03) நாட்டை விட்டு புறப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.