முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றும் முடிவு இல்லை

நவம்பர் 27, 2019

ஊடக அறிக்கை  

நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள்   ஆகியன பொலிசாரினால் அகற்றப்படவுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள்  எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிசாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை  எனவும் அறியத்தருகின்றோம்.  

மேலும் இது தொடர்பான  வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.