புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் நியமனம்

நவம்பர் 27, 2019

பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் புதன் கிழமையன்று (நவம்பர், 27) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள், மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராகவும், உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.